ADDED : மார் 28, 2026 06:37 AM

அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பத்தில் துணை ராணுவப்படை வீரர்கள், போலீசாருடன் இணைந்து கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்.
தமிழகம் உட்பட, 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தலையொட்டி பொதுமக்களிடையே அச்சத்தை போக்கும் வகையில் 100 சதவீத ஓட்டளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில், நெய்வேலி டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் பேரணி நடந்தது.
மந்தாரக்குப்பம் பஸ் நிலையம், பெரியாக் குறிச்சி, கடலுார் - விருத்தாசலம் சாலையில் 50 துணை ராணுவப்படை வீரர்களுடன் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மேளதாளங்களுடன் ஒலிபெருக்கி மூலம் 100 சதவீத ஒட்டளிக்க வலியுறுத்தி பொதுமக்கள், வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இன்ஸ்பெக்டர் இளவழகி, சப்-இன்ஸ்பெக்டர் கவிநிலவன், தனிப்பிரிவு ஜோதிமணி, போலீசார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
