ADDED : ஏப் 03, 2026 05:40 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த பரவளூர் தெற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் ஆண்டு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் இந்திராகாந்தி தலைமை தாங்கினார். ஆசிரியர் கோமதி வரவேற்றார். ஆசிரியர்கள் பழனியம்மாள், தீபா, கண்மணி, ஸ்ரீதேவி, சபிதா உட்பட பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், உறுப்பினர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
இதில், மாணவர்களுக்கு விளையாட்டு, நடனம், கலை இலக்கிய போட்டி கள் நடத்தப்பட்டு, பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.
மேலும், 100 சதவீத வருகை, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் கவுரவிக்கப்பட்டன.
ஆசிரியர் கயல்விழி நன்றி கூறினார்.
