/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கட்டடம் இல்லாத அங்கன்வாடி குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு
/
கட்டடம் இல்லாத அங்கன்வாடி குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு
கட்டடம் இல்லாத அங்கன்வாடி குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு
கட்டடம் இல்லாத அங்கன்வாடி குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு
ADDED : செப் 28, 2024 07:00 AM
விருத்தாசலம், : விருத்தாசலம் அடுத்த கவணை ஊராட்சியில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில் இருந்த ஓட்டு கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டது. கிராமத்தை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் சத்துணவு சாப்பிட்டு, கல்வி பயின்று வந்தனர்.
அங்கன்வாடி மைய மேற்கூரையில் மழைநீர் ஒழுகுவதாக புகார் தெரிவித்த நிலையில், ஓராண்டுக்கு முன் கட்டடத்தையே இடித்து அகற்றினர். ஆனால், இதுநாள் வரை அகற்றப்பட்ட கட்டட கழிவுகளையும் அகற்றவில்லை. புதிதாக கட்டடம் கட்டும் பணியும் துவங்கவில்லை.
இதனால் துவக்கப் பள்ளி முகப்பு கட்டடத்தில் குழந்தைகள் அமர்ந்தும், துாங்கியும் செல்கின்றனர். கட்டடம் இல்லாததால் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப பெற்றோர் மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தலையிட்டு, கவணையில் அங்கன்வாடி மைய கட்டடம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.