/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீபாவளிக்கு முன்பாக சம்பளம் பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை
/
தீபாவளிக்கு முன்பாக சம்பளம் பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை
தீபாவளிக்கு முன்பாக சம்பளம் பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை
தீபாவளிக்கு முன்பாக சம்பளம் பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை
ADDED : அக் 27, 2024 06:20 AM
சேத்தியாத்தோப்பு : தீபாவளிக்கு முன்னதாக சம்பளம் வழங்க வேண்டும் என, பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில செயலாளர் செந்தில்குமார், முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு ஓரிரு நாட்களே உள்ளதால், அக்டோபர் மாத சம்பளத் தொகையை முன்னதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்., 31ம் தேதி தீபாவளி விடுமுறையும், நவ., 1ம் தேதி அரசு விடுமுறையும் வருவதால் பகுதி நேர ஆசியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குனர் அலுவலகத்திலிருந்து 38 மாவட்டங்களுககு சம்பளத்திற்கான நிதியை அனுப்ப வேண்டும்.
அதன் பிறகுதான் அந்தந்த மாவட்ட அலுவலகங்கள் பகுதி நேர ஆசிரியர்களின் வங்கி கணக்கிற்கு மத்திய அரசு திட்ட நிதி 10 ஆயிரம், மாநில அரசு நிதியிலிருந்து 2500 ரூபாய் என இரண்டு பிரிவாக சம்பளம் வழங்கப்படுகிறது. இதெல்லாம் ஒரே நாளில் நடக்க சாத்தியமில்லை.
பொங்கலுக்கு போனஸ், தீபாவளிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாத நிலையில், தீபாவளியை முன்னிட்டு, சம்பளத்தையாவது முன்னதாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.