தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சபா ராஜேந்திரனுக்கு கட்சியினர் வரவேற்பு

 சபா ராஜேந்திரனுக்கு கட்சியினர் வரவேற்பு

 சபா ராஜேந்திரனுக்கு கட்சியினர் வரவேற்பு


ADDED : மார் 29, 2026 10:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 10:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்வேலி: நெய்வேலியில், தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடலுார் மேற்கு மாவட்டம், நெய்வேலி சட்டசபை தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் சபா ராஜேந்திரன் நேற்று தொகுதிக்கு வருகை தந்தார். பணிக்கன்குப்பத்தில் இருந்து காடாம்புலியூர், கொள்ளக்காரன்குட்டை வழியாக நெய்வேலி ஆர்ச்கேட்டுக்கு வருகை தந்த சபா ராஜேந்திரனுக்கு வழிநெடுகிலும் தி.மு.க., மட்டுமின்றி கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

ஆர்ச்கேட் வளாகத்தில் பட்டாசு வெடித்து, பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்- 25 ல் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து சபா மரியாதை செலுத்தினார்.

பின்னர் நெய்வேலி டவுன்ஷிப் முழுவதும் தி.முக., மற்றம் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி என்.எல்.சி., தொ.மு.ச., மற்றும் கூட்டணிக்கட்சி தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களும் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us