ADDED : பிப் 28, 2026 04:55 AM
அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்திற்குள் குறிப்பிட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன. மேலும் சிதம்பரம்-சேலம், கடலுார்-திருப்பூர், கடலுார்-திருச்சி, கடலுார்-மதுரை உள்ளிட்ட வெளியூர் செல்லும் பஸ்கள் மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்திற்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர்.
இதனால் பஸ் நிலையத்திற்குள் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் சரியான நேரத்திற்கு வெளியூர்களுக்கு செல்லமுடியாத நிலை உள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
