/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.90 லட்சத்தில் சீரமைப்பு பணி பயணிகள், ஓட்டுனர்கள் மகிழ்ச்சி
/
ரூ.90 லட்சத்தில் சீரமைப்பு பணி பயணிகள், ஓட்டுனர்கள் மகிழ்ச்சி
ரூ.90 லட்சத்தில் சீரமைப்பு பணி பயணிகள், ஓட்டுனர்கள் மகிழ்ச்சி
ரூ.90 லட்சத்தில் சீரமைப்பு பணி பயணிகள், ஓட்டுனர்கள் மகிழ்ச்சி
ADDED : ஜன 29, 2025 07:30 AM

விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில், 25 ஆண்டுகளுக்கு முன் பஸ் நிலையம் கட்டப்பட்டது. அப்போதைய மக்கள் தொகை அடிப்படையில் கட்டப்பட்ட பஸ் நிலையத்திற்கு மாற்றாக இதுநாள் வரை புதிய பஸ் நிலையம் கட்டப்படவில்லை.
ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறல என்பதுபோல இட நெருக்கடியில் பயணிகள், போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், பஸ் நிலைய மேற்கூரை, சுவர்கள் விரிசல் விழுந்து மழைநீர் ஒழுகுவதால் மழைக்காலங்களில் பயணிகள் நிற்க இடமின்றி தவிக்கும் அவலம் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்கும் வகையில் விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் சார்பில் 90 லட்சம் ரூபாயில் பஸ் நிலையத்தை சீரமைக்கும் பணியை துவக்கியுள்ளது. அதன்படி, மேற்கூரையில் புதிதாக தளம் அமைத்து மழைநீர் புகாதவாறு மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும், குடிநீர், கழிவறை உட்பட அடிப்படை வசதிகளை தன்னிறைவாக மாற்றப்பட உள்ளதால் பயணிகள், போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.