ADDED : ஏப் 13, 2026 11:25 PM

கடலுார்: கடலுாரில் இரு தனியார் பஸ்கள் மோதிக் கொண்டதில் 20 பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர்.
கடலுாரில் இருந்து நேற்று காலை திருவண்ணாமலைக்கும், பண்ருட்டிக்கும் ஒன்றன் பின் ஒன்றாக தனியார் பஸ் இரண்டும் போட்டி போட்டுக் கொண்டு முந்திச் செல்ல அதிவேகமாக சென்றது. இரு பஸ்களிலும் 15க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். கடலுார் அரசு மருத்துவமனை அருகில் வந்த போது, பண்ருட்டி பஸ் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். அப்போது, பின்னால் வந்த திருவண்ணாமலை செல்லும் தனியர் பஸ், பண்ருட்டி பஸ்சின் பின்னால் மோதியதால் பயணிகள் அலறினர். இதில், பயணிகள் காயமின்றி தப்பினர். திருவண்ணாமலை பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதமானது. இதுகுறித்து கடலுார், புதுநகர் போலீசார் விசரணை நடத்தியதில், டைமிங் பிரச்னை காரணமாக முந்தி செல்ல முயன்ற போது, விபத்து ஏற்பட்டது தெரிந்து.
