/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிழற்குடை அமைக்க பயணியர் எதிர்பார்ப்பு
/
நிழற்குடை அமைக்க பயணியர் எதிர்பார்ப்பு
ADDED : செப் 13, 2025 09:07 AM

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் கடைவீதியில் நான்கு ஆண்டுகளாகியும் நிழற்குடை அமைக்காததால் பொதுமக்கள் அவதிய டைகின்றனர்.
கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கப்பணிக்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மந்தாரக்குப்பம் கடைவீதியில் இருந்த நிழற்குடையை அகற்றப்பட்டது. சாலை விரிவாக்க பணி முடிந்ததும், இச்சாலை வழியாக தினசரி நுாற்றுக்கணக்கான பஸ்கள் செல்கின்றன.
பல்வேறு பகுதியில் இருந்து தினசரி ஏராளமானோர் மந்தாரக்குப்பம் வந்து செல்கின்றனர். பஸ் நிறுத்தங்களில் பஸ்ஸிற்காக காத்திருக்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் நிழற்குடை இல்லாததால் அருகில் உள்ள கடைகளுக்கு எதிரில் வெயில், மழையிலும் காத்திருக்கும் நிலை உள்ளது.
தற்போது கெங்கைகொ ண்டான் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிக நிழற்குடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நிரந்தரமாக பயணியர் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.