ADDED : மார் 16, 2026 04:15 AM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: அரசு பஸ் அடிக்கடி நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பண்ருட்டியிலிருந்து பாலுார், நடுவீரப்பட்டு, குறிஞ்சிப்பாடி வழியாக அரசு பஸ் தடம் எண்: 165 இயக்கப்பட்டு வருகிறது.
இந்த வழிதடத்தில், ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் தான் காலை குறிஞ்சிப்பாடிக்கு பெரும்பாலானோர், வேலைக்கு சென்று வருகின்றனர்.
இந்த பஸ் எவ்வித அறிவிப்பும இல்லாமல் அடிக்கடி நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்ற னர்.
மேலும், வேறு பஸ் இல்லாததால், தொடர்ந்து பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
