/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலி ரயில் நிலையத்தில் வசதியின்றி பயணிகள் அவதி
/
நெய்வேலி ரயில் நிலையத்தில் வசதியின்றி பயணிகள் அவதி
நெய்வேலி ரயில் நிலையத்தில் வசதியின்றி பயணிகள் அவதி
நெய்வேலி ரயில் நிலையத்தில் வசதியின்றி பயணிகள் அவதி
ADDED : அக் 01, 2024 06:51 AM
மந்தாரக்குப்பம்: நெய்வேலி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதியின்றி, பயணிகள் கடும் அவதியடைகின்றனர்.
நெய்வேலி ரயில் நிலையத்தில் இருந்து பெங்களுரூ, திருச்சி, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு தினசரி ரயில்கள் இயக்கப்படுகின்றன. நெய்வேலி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தினமும் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிட வசதி, ரயில் வருகை புறப்பாடு குறித்து தகவல் பலகை இல்லாததால் பயணிகள் கடும் அவதிபடுகின்றனர்.
மேலும், இரவு நேரத்தில் ரயில் நிலைய வளாகத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பயணிகள் அச்சத்துடன் வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
ரயில்வே ஸ்டேஷன் அருகே பல இடங்களில் புதர் மண்டியும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் அச்சத்துடனேயே பயணிகள் ரயிலுக்காக காத்திருக்கின்றனர். எனவே நெய்வேலி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.