/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு மருத்துவமனையில் நோயாளிகள் குவிந்தனர்
/
அரசு மருத்துவமனையில் நோயாளிகள் குவிந்தனர்
ADDED : நவ 05, 2024 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்பிற்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனையில் நோயாளிகள் குவிந்தனர்.
கடலுார் மாவட்டத்தில் சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த பருவநிலை மாற்றத்தால் பொது மக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், தினமும் கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் நுாற்றுக்கணக்கான நோயாளிகள் காய்ச்சல், சளி உள்ளிட்ட உடல்நிலை பாதிப்பிற்கு சிகிச்சை பெற குவிந்து வருகின்றனர். இதனால், டோக்கன் கொடுக்கும் இடத்தில் நீண்ட வரிசையில் காலை முதல் காத்திருந்து சிகிச்சை பெறுகின்றனர்.