/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் கோப்பை போட்டி பத்திரக்கோட்டை பள்ளி வெற்றி
/
முதல்வர் கோப்பை போட்டி பத்திரக்கோட்டை பள்ளி வெற்றி
முதல்வர் கோப்பை போட்டி பத்திரக்கோட்டை பள்ளி வெற்றி
முதல்வர் கோப்பை போட்டி பத்திரக்கோட்டை பள்ளி வெற்றி
ADDED : செப் 05, 2025 03:24 AM

நடுவீரப்பட்டு: முதல்வர் கோப்பை விளையாட்டுப்போட்டியில், பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கைப்பந்து போட்டியில் இரண்டாமிடம் பிடித்தனர்.
கடலுார் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், கடந்த 30ம் தேதி முதல் கடந்த 2ம் தேதி வரை மூன்று நாட்கள் கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. இதில் மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு குழு விளையாட்டுப்போட்டிகள் நடந்தது. அதில், நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள், கைப்பந்து போட்டியில் இரண்டாமிடம் பிடித்தனர். மேலும், சிறப்பாக விளையாடிய மாணவிகள் சஞ்சனா, அர்ச்சனா, அஸ்வினி, அஸ்மிதா, சஞ்சனா ஆகியோர் சென்னையில் நடக்க முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டியில் கடலுார் மாவட்ட அணிக்காக விளையாட உள்ளனர்.
போட்டியில் சிறப்பாக விளையாடிய மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை மீனாம்பிகை மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.