தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாவட்டத்தில் மீண்டும் ரோந்து பணி எஸ்.பி., அதிரடி நடவடிக்கை

மாவட்டத்தில் மீண்டும் ரோந்து பணி எஸ்.பி., அதிரடி நடவடிக்கை

மாவட்டத்தில் மீண்டும் ரோந்து பணி எஸ்.பி., அதிரடி நடவடிக்கை


ADDED : ஆக 28, 2026 10:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 10:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 கடலுார், ஆக. 29–

‘தினமலர்’ செய்தி எதிரொலியால், மாவட்டத்தில்  போலீஸ் இரவு ரோந்து பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் போலீசார் இரவு ரோந்துப்பணி நிறுத்தியதால் ஆங்காங்கே கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகரித்தது. மாவட்டத்தின் பல பகுதிகளில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை சம்பவம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ‘தினமலரில்’ செய்தி வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து எஸ்.பி., விவேகானந்த சுக்லா, மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும், போலீசார் நடந்து சென்று ரோந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

அதன்படி, கடலுாரில் இன்ஸ்பெக்டர்கள் இளவரசி, ஏழுமலை புவனகிரியில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், பெண்ணாடத்தில் இன்ஸ்பெக்டர் சரவணன், சிதம்பரத்தில் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று இரவு கடைவீதிகள் மற்றும் போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் நடந்து சென்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்பட்ட ‘பார்க்கிங்’ இடங்களில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us