/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனைவரையும் ஈர்க்கும் 'பட்டம்' இதழ்
/
அனைவரையும் ஈர்க்கும் 'பட்டம்' இதழ்
ADDED : ஜன 29, 2025 05:28 AM

'தினமலர் -பட்டம்' இதழ் மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். கடந்த சில மாதங்களாகத்தான், இந்த இதழை வாசிக்கிறேன். இதில் நிறைய பயனுள்ள கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. குழந்தைகள் மட்டுமின்றி, பெற்றோரும் தங்கள் அறிவை பெருக்கிக் கொள்ளும் வகையில் தகவல்கள் மலை போல குவிந்துள்ளது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் கட்டாயம் பங்கேற்பேன்.
-சிவஞானமொழி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு.
மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மட்டுமே, போதிய அறிவை கொடுத்து விட முடியாது. நல்ல புத்தகங்களும், 'பட்டம்' போன்ற இதழ்களும் தான், அவர்களின் அறிவை பெருகச்செய்து, முழுமையை நோக்கி முன்னேற்றும் கருவிகள். நல்ல தரத்துடன் நுணுக்கமான தகவல்களுடன், ஆர்வத்தை துாண்டும் வகையில், அனைத்து தரப்பு மக்களையும் 'பட்டம்' இதழ் கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோருக்கும் மிகப்பெரிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. மாணவ-மாணவிகள் மிகுந்த சிரத்தையுடன் தயாராகி போட்டியில் பங்கேற்றனர். அதனால் இறுதிசுற்று வரை பரபரப்பாக இருந்தது.
-சாமூண்டீஸ்வரி, கரிக்கலாம்பாக்கம்.
நான் சிறுவயதில் இருந்தே 'தினமலர்' வாசகன். என் பள்ளிப்பருவத்தில், சிறுவர் மலர், வார மலர் இதழ்களை தொடர்ந்து வாசிப்பேன். இப்போது என் குழந்தைகள் கூடுதலாக 'பட்டம்' இதழை வாசிக்கின்றனர். பட்டம் இதழில் வரும் தகவல்கள் சம்பந்தமாக வீட்டில் அவ்வப்போது கலந்துரையாடல் நடக்கும். வாசிக்கும் பழக்கம் அனைவரிடம் குறைந்து வரும் காலகட்டத்தில், மாணவர்களிடம் மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தி வரும் 'தினமலர் - பட்டம்' இதழுக்கு மனமார்ந்த நன்றி.
- வினோத்குமார், உப்பளம், புதுச்சேரி.

