ADDED : நவ 04, 2025 01:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்சாரம் தாக்கி மயில் இறந்தது.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான மயில்கள் சுற்றித்திரிகின்றன. நேற்று மதியம் கலெக்டர் அலுவலக டிரான்ஸ்பார்மர் மேல் மயில் பறந்தபோது, திடீரென மின்சாரம் தாக்கி கீழே விழுந்து இறந்தது. அப்போது, டிரான்ஸ்பார்மர் வெடித்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

