ADDED : அக் 03, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் ஆடி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட வேர்க்கடலை செடிகளை, அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
விருத்தாசலம் அடுத்த மணலுார், எருமனுார், சின்னவடவாடி, எ.வடக்குப்பம், விஜயமாநகரம், கோ.பூவனுார், கோ.பவழங்குடி, தொட்டிக்குப்பம், குப்பநத்தம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் ஆண்டு தோறும் ஆடி பட்டத்தில் வேர்க்கடலை சாகுபடி செய்வது வழக்கம்.
அதே போன்று நடப்பாண்டு ஆடி பட்டத்தில் வி வசாயிகள் வேர்க்கடலை சாகுபடி செய்திருந்தனர்.
செடிகள் நன்கு வளர்ந்த நிலையில், கடந்த ஒருவாரமாக வேர்க்கடலை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.