ADDED : மார் 18, 2026 03:50 AM
அ நிறம் | அளவு
கடலுார்: கூழாங்கற்களை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டிச்சாவடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சப்இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் புதுபூஞ்சோலைக்குப்பம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அக்கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் நந்தகோபால், 38; தனது வீட்டின் அருகே கூழாங்கற்களை சட்ட விரோதமாக விற்பதற்காக டிராக்டரில் ஏற்றிக் கொண்டிருந்தார். டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப் பதிந்து நந்தகோபாலை கைது செய்தனர்.
