/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூழாங்கற்கள் கடத்தல் லாரி பறிமுதல்
/
கூழாங்கற்கள் கடத்தல் லாரி பறிமுதல்
ADDED : ஜன 13, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : கடலுார் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியியலாளர் ஜீவா தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் அதிகாலை, வண்ணாங்குடி காடு பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த டிராக்டர் டிப்பரை மறித்து சோதனை செய்தபோது, 3 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரிந்தது. லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடி, தலைமறைவானார்.
உதவி புவியியலாளர் ஜீவா புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீ சார் வழக்குப் பதிந்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.