ADDED : ஜன 23, 2026 06:14 AM
அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: கூழாங்கற்கள் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குள்ளஞ்சாவடி போலீஸ் எஸ்.ஐ., கனகராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம், நான்கு முனை சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த லாரி ஒன்றை போலீசார் சோதனை செய்ததில், அதில் சட்டவிரோதமாக, 5 டன் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரிந்தது.
அதன் பின்னால், கூழாங்கற்கள் கடத்திய லாரிக்கு வழி நோட்டமிட்ட நபர்கள், காரில் பயணித்தது கண்டறியப்பட்டது.
போலீசார் அவர்களை கைது செய்ய முயற்சித்த போது, காரில் இருந்த, 2 பேர் அங்கிருந்து தப்பினர். கூழாங்கற்கள், லாரி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
