ADDED : மார் 20, 2026 07:50 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: கூழாங்கற்கள் கடத்தி சென்ற லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பிரதாப் சந்திரன் மற்றும் போலீசார், நேற்று ஆலடி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்தனர். அதில், அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித் து, விருத்தாசலம் போலீசார் இருசாளகுப்பம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஸ்ரீகாந்த், 21; நடியப்பட்டு அலெக்ஸ்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.
