ADDED : ஏப் 16, 2026 10:27 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தி சென்ற லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மங்கலம்பேட்டை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று சமத்துவபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில், அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய நடியப்பட்டு கிராமத்தை சேந்த லாரி டிரைவர் கதிர்வேலுவை தேடி வருகின்றனர்.
