/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் அருகே கூழாங்கற்கள் கடத்தல்; சமூக வலைதளங்களில் படங்கள் வைரல்
/
விருத்தாசலம் அருகே கூழாங்கற்கள் கடத்தல்; சமூக வலைதளங்களில் படங்கள் வைரல்
விருத்தாசலம் அருகே கூழாங்கற்கள் கடத்தல்; சமூக வலைதளங்களில் படங்கள் வைரல்
விருத்தாசலம் அருகே கூழாங்கற்கள் கடத்தல்; சமூக வலைதளங்களில் படங்கள் வைரல்
ADDED : ஜன 31, 2025 08:04 AM

விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே ஓடை புறம்போக்கு, தனிநபர் நிலங்களில் அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் படங்கள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம் அடுத்த கோட்டேரி, நறுமணம், ஆலடி, பாலக்கொல்லை உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கூழாங்கற்கள் அடங்கிய கனிம வளம் அதிகமாக உள்ளது.
இங்கு அரசு அனுமதி பெற்று குவாரிகள் இயங்கி வருகின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து லாரிகள் மூலம் கூழாங்கற்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஆனால், நள்ளிரவு நேரங்களில் அனுமதியின்றி ஓடை புறம்போக்கு மற்றும் தனிநபருக்கு சொந்தமான முந்திரி நிலங்களில் இருந்து செம்மண்ணை சலித்து கூழாங்கற்கள் பிரித்தெடுத்து, உரிமம் இல்லாமல் கடத்திச் செல்லப்படுகிறது.
இந்நிலையில், விருத்தாசலம் அடுத்த கோட்டேரி கிராமத்தில் ஓடை புறம்போக்கு நிலம் மற்றும் தனிநபருக்கு சொந்தமான நிலங்களில் இருந்து கூழாங்கற்கள் விதிமீறலாக பிரித்து எடுக்கப்படும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் செம்மண்ணை சலித்து, கூழாங்கற்கள் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஓடை புறம்போக்கு மற்றும் முந்திரி தோப்பில் ஆழமாக தோண்டி எடுத்து செம்மண் குவியல் குவியலாக இருக்கும் படங்கள் உள்ளன.
இது குறித்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கூழாங்கற்கள் கடத்துவது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

