தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சாலையோர முட்புதர் வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையோர முட்புதர் வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையோர முட்புதர் வாகன ஓட்டிகள் அச்சம்


UPDATED : நவ 23, 2026 12:00 AM

ADDED : நவ 22, 2026 10:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 12:00 AM ADDED : நவ 22, 2026 10:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திட்டக்குடி: திட்டக்குடி அருகே சாலையோரங்களில் மண்டிய முட்புதர்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திட்டக்குடி அடுத்த சாத்தநத்தம் – சிறுமுளை சாலையை பயன்படுத்தி சாத்தநத்தம், நாவலுார், ஆதமங்கலம், வையங்கு டி, சிறுமுளை, பெருமுளை, புதுக்குளம் கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு திட்டக்குடி, விருத்தாசலம், பெண்ணாடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.

கி ராமங்களுக்கு செல்லும் சாலையில் பல இடங்களில் வளைவுகள் உள்ளன. குறுகலான இச்சாலையோரங்களில் அதிகளவில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் இச்சாலை வளைவுகளில் இருசக்கர மற்றும் பள்ளி வாகனங்கள் செல்லும்போது விபத்துகள் நிகழ்வதுடன் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.

எனவே, சாத்தநத்தம் – சிறுமுளை சாலையில் முட்புதர்களை அகற்ற வேண்டும் என பொது மக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us