ADDED : டிச 22, 2025 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார், உண்ணாமலை செட்டிசாவடியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஓய்வூதியர் தின விழா நடந்தது.
வட்ட கிளை தலைவர் ஜெ கரட்சகன் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் நல்லதம்பி, மாவட்ட பிரசார செயலாளர் சிங்காரம், இணை செயலாளர் சுந்தர்ராஜா, பொறுப்பாளர் குணசேகரன், ஓய்வு பெற்ற ஊராட்சி உதவி இயக்குனர் ராம்குமார், ஓய்வு பெற்ற வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஷாஜகான், ராமமூர்த்தி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ரவி வாழ்த்தி பேசினர்.
தொடர்ந்து, நடந்த கூட்டத்தில், 70 வயது பூர்த்தி அடைந்த ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அஞ்சலிதேவி நன்றி கூறினார்.

