/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பென்ஷனர்கள் கூட்டமைப்பு மாவட்ட நிர்வாக குழு
/
பென்ஷனர்கள் கூட்டமைப்பு மாவட்ட நிர்வாக குழு
ADDED : நவ 03, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு மாவட்ட நிர்வாகக்குழுக் கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். பக்கிரி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமசாமி, பொருளாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை வாசித்தனர். கூட்டத்தில், நிர்வாகிகள் பக்கிரி, கிருஷ்ணமூர்த்தி, சண்முகம், தமிழ்மணி, ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.
தமிழக அரசு 70 வயது பென்ஷனர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் பென்சன் வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

