ADDED : பிப் 11, 2026 03:43 AM

விருத்தாசலம்: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
ராமலிங்கம், சந்திரா, குமாரசாமி, சின்னசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட தலைவர் வீராசாமி துவக்கி பேசினார்.
அதில், 70 வயது முதிர்ந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும்; கிராமங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி உதவியாளர்கள், கிராம உதவியாளர்களுக்கு 7,850 ரூபாய் குறைந்தபட்ச ஓய்வூதியம்; மருத்துவ காப்பீடு திட்டத்தில் குறைகளை களைந்து காசில்லா மருத்துவத்திற்கு உத்தரவாதம் தர வேண்டும்; என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.
