/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கடை திறக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம்
/
ரேஷன் கடை திறக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம்
ADDED : ஜன 15, 2024 06:34 AM

நடுவீரப்பட்டு : பத்திரக்கோட்டையில் ரேஷன்கடை திறக்காததால் பொதுமக்கள் பொங்கல் தொகுப்பினை வாங்க முடியாமல் அவதியடைந்தனர்.
தமிழக அரசு தற்போது பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி வருகிறது. இந்த பரிசு தொகுப்பினை பெறாத ரேஷன் அட்டைதாரர்களுக்கு நேற்று போகி பண்டிகை தினத்தில் அனைத்து கடைகளையும் திறந்து வழங்கிட அதிகாரிகள் உத்திரவிட்டிருந்தனர்.
பத்திரக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் பத்திரக்கோட்டை - குறிஞ்சிப்பாடி செல்லும் சாலையில் ரேஷன்கடை உள்ளது.
இந்த கடையில் அம்பேத்கர் நகர், நடுத்தெரு, அம்மன்கோவில் தெரு, சிலுவைபாளையம் உள்ளிட்ட பகுதிளை சேர்ந்த 800 ரேஷன் அட்டைகள் உள்ளன.
பொங்கல் தொகுப்பினை வாங்கிட பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று காலையில் ரேஷன் கடையில் குவிந்தனர். ஆனால் மதியம் 1:00 மணிவரை விற்பனையாளர் கடைக்கு வராததால் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.