/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மத்திய குழுவிற்காக சாலையை சகதியாக்கிய நெடுஞ்சாலைத்துறை கடலுார் அருகே நடந்து செல்ல கூட முடியாமல் மக்கள் தவிப்பு

ADDED : டிச 13, 2024 06:35 AM

கடலுார்: கடலுார் அருகே வெள்ளம் பாதித்த கிராமத்திற்கு மத்திய குழு வந்ததையடுத்து, கரடு முரடான சாலையில் செம்மண் கொட்டி சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் சகதியாக்கியதால், மக்கள் நடந்து செல்ல கூட முடியாமலும், விபத்துக்களில சிக்கியம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால், தென்பெண்ணையாற்றில் கடந்த 2ம் தேதி, 2.40 லட்சம் கனஅடி வரை தண்ணீர் சென்றது.
அப்போது நாணமேடு, கங்கணாங்குப்பம் ஆகிய பகுதிகளில் போடப்பட்ட அணை உடைந்து நாணமேடு கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
அதன்காரணமாக சாலை அரிப்பு ஏற்பட்டு வெறும் ஜல்லிகளாகவே தெரிந்தது.
இந்நிலையில் மத்திய குழு பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட வருகை தந்தது. அதையொட்டி சீர்கேடான சாலையில், செம்மண் கொட்டி, சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் சீர் செய்தனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் செம்மண் முழுவதும் சகதியாக மாறி, சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர்கள், கிராம மக்கள் அனைவரும் இந்த சாலையை பயன்படுத்தி தான் வெளியே வர முடியும்.
ஆனால் கடந்த 2 நாட்களாக சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
நடந்து கூட செல்ல முடியாமல் கிராம மக்கள் முடங்கியுள்ளனர்.
எனவே, போர்கால அடிப்படையில் சகதியை சரி செய்தால் மட்டுமே கிராம மக்கள் வெளியே வர முடியும்.