/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தெரு மின் விளக்குகள் எரியாததால் மக்கள் அவதி
/
தெரு மின் விளக்குகள் எரியாததால் மக்கள் அவதி
ADDED : செப் 15, 2025 02:15 AM
நெல்லிக்குப்பம்: விஸ்வநாதபுரம் நகர பகுதியில் தெரு மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட விஸ்வ நாதபுரம், நகர பகுதியில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் உள்ளது. இந்த சாலையில் 100க்கும் மேற்பட்ட தெரு மின் விளக்குகள் உள்ளன. இவற்றில் 20க்கும் மேற்பட்ட விளக்குகள் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக எரியவில்லை. இதனால், அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் தினமும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பா.ம.க., கவுன்சிலர் பன்னீர்செல்வம் கூறுகையில், 'விஸ்வநாதபுரம் பகுதியில் வளைவான சாலை உள்ள இடங்களில் தெரு மின் விளக்குகள் எரியாததால் விபத்துகள் நடக்கிறது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள் நலன் கருதி தெரு மின் விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.