/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி
/
குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி
ADDED : மார் 05, 2024 06:20 AM
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சியில் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சியில் 10 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 15 வார்டுகளில் 1500 குடியிருப்பு வீடுகள் உள்ளன. 600 க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன.
இங்கு, மோட்டா மேடு குடிநீர் தொட்டி, வெள்ளத்து மாரியம்மன் கோவில் தெருவில் 2 லட்சம் கொள்ளளவு கொண்ட குடீநீர் தொட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மற்றும் மாரியம்மன்கோவில், நண்பர்கள் நகர் ஆகிய இடங்களில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது.
இதில் மோட்டாமேடு, வெள்ளத்து மாரியம்மன்கோவில் குடிநீர் தொட்டி பயன்பாட்டில் உள்ளது. மற்ற 3 குடிநீர்தேக்கத் தொட்டிகள் பயன்பாட்டில் இல்லை. இப்பகுதியில் குடிநீர் சீராக வழங்காததால் தினமும் காலை 6:00 மணி முதல் 6:30 மணிக்குள் மட்டும் தண்ணீர் வருகிறது. அதன்பிறகு தண்ணீர் வருவதில்லை.
இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, பேரூராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்.

