/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கலங்கலான குடிநீர் மக்கள் கடும் அவதி
/
கலங்கலான குடிநீர் மக்கள் கடும் அவதி
ADDED : நவ 10, 2024 04:28 AM
நெல்லிக்குப்பம், :நெல்லிக்குப்பத்தில் குடிநீர் கலங்கலாக வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் காலை, மாலை 2 வேளைகளிலும் நகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், ஜம்புலிங்கம் பூங்காவில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் இருந்து சப்ளை செய்யப்படும் குடிநீர் கடந்த 4 நாட்களாக வஜீர்கான் தெரு, ராஜிவ்காந்தி நகர் பகுதிகளில் கலங்கலாக வருவதால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதனால், இப்பகுதிகளில் வசிக்கும் 1000க்கும் மேற்பட்டோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிகாரிகள் உடனடியாக குடிநீர் பிரச்னையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.