/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இயங்காத பஸ் நிலைய பராமரிப்பு பணியால் மக்கள் அதிருப்தி...: சிறுபாக்கத்தில் அரசு நிதி வீணாகும் அவலம்
/
இயங்காத பஸ் நிலைய பராமரிப்பு பணியால் மக்கள் அதிருப்தி...: சிறுபாக்கத்தில் அரசு நிதி வீணாகும் அவலம்
இயங்காத பஸ் நிலைய பராமரிப்பு பணியால் மக்கள் அதிருப்தி...: சிறுபாக்கத்தில் அரசு நிதி வீணாகும் அவலம்
இயங்காத பஸ் நிலைய பராமரிப்பு பணியால் மக்கள் அதிருப்தி...: சிறுபாக்கத்தில் அரசு நிதி வீணாகும் அவலம்
ADDED : ஆக 01, 2025 02:42 AM

சிறுபாக்கம்: சிறுபாக்கத்தில் இயங்காத பஸ் நிலையத்தில் அடிப் படை வசதிகளை புதுப்பிக்கும் பணி நடப்பதால் அரசின் நிதி வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
திட்டக்குடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட மங்களூர் ஒன்றியத்தில், சிறுபாக்கம் ஊராட்சி அதிக மக்கள் தொகை கொண்ட முதன்மை ஊராட்சியாக உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு, சிறுபாக்கத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட ஒருங்கிணைந்த ஒப்படைப்பு திட்டத்தில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. இங்கு வணிக வளாகம், பயணிகள் காத்திருப்பு கூடம், இருக்கை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறைகள், டிரைவர் கண்டக்டர் ஓய்வறை என, நவீன வசதிகள் உள்ளது.
விருத்தாசலத்தில் இருந்து மங்களூர், சிறுபாக்கம் வழியாக சின்னசேலம், திட்டக்குடியில் இருந்து மங்களூர், சிறுபாக்கம் வழியாக சின்னசேலம் வரையிலும், திட்டக்குடியில் இருந்து சிறுபாக்கம், மாங்குளம் வழியாக கள்ளக்குறிச்சி வரையிலும், ராமநத்தத்தில் இருந்து சிறுபாக்கம் வழியாக வரும் டவுன் பஸ், விருத்தாசலத்திலிருந்து சிறப்பு வழியாக சேலம் ஆத்துார் வரை அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.
புதிய பஸ் நிலையம் 2014ம் ஆண்டு பிப்., 14ம் தேதி கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால் கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மக்கள் பயன்பாட்டிற்கு வரவே இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாத பஸ் நிலையத்திற்குள் பஸ்களை இயக்க டிரைவர்கள் முன்வரவில்லை.
மாறாக பஸ் நிலைய நுழைவு வாயிலேயே இறக்கி விட்டு செல்கின்றனர். இதனால், பஸ் நிலையம் பயன்படாமலேயே உள்ளது. பொதுமக்களும் வெளியில் காத்திருந்து பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, விருத்தாசலத்தில் இருந்து சிறுபாக்கம் மெயின் ரோட்டில் இருந்து உள்ளே வந்து செல்லும் பஸ்கள் கூட உள்ளே வராமல் மெயின்ரோடு வழியாக சேலம், ஆத்துார் செல்கின்றன. வணிக வளாகத்தில் உள்ள 14 கடைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடும் வழக்கம் இருந்தது.
ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக ஏலம் குறித் த அறிவிப்பு எதுவும் செய்யாமல் மறைமுகமாகவே ஏலம் விடப்படுகிறது. பயணிகள் இருக்கைகள் காணவில்லை. கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறைகள் ஒரு நாள் கூட பயன்பாட்டுக்கு வராத நிலையில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளின் நிதியில் இருந்து புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இது ெபாதுமக்களை அதிருப்தியடைய செய்துள்ளது
பயன்படாத பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணி செய்து அரசின் நிதியை வீணாக்குவது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அடிப்படை வசதிகளை நிறைவேற்றி பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.