/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊ.கொளப்பாக்கம் சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை
/
ஊ.கொளப்பாக்கம் சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : செப் 06, 2025 03:29 AM

விருத்தாசலம்: குமாரமங்கலம் -ஊ.கொளப்பாக்கம் இணைப்பு சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குமாரங்கலம் கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இங்கிருந்து ஊ.கொளப்பாக்கம் வழியாக, விருத்தாசலம் - கடலுார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசகுழி கிராமத்தை இணைக்கும் வகையில் 5 கி.மீ., தொலைவிற்கு தார் சாலை உள்ளது.
இந்த சாலையின் இருபுறம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வழியாக மாணவர்கள், கிராம மக்கள் மற்றும் வேளாண் விளைபொருட்களை ஏற்றிக் கொண்டு டிராக்டர், டாடா ஏஸ், லாரி போன்ற வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறிவிட்டது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி, வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.
எனவே, குமாரமங்கலம் - ஊ.கொளப்பாக்கம் கிராம இணைப்பு சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.