/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இலுப்பை குளம் துார்வாரும் பணி விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
/
இலுப்பை குளம் துார்வாரும் பணி விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
இலுப்பை குளம் துார்வாரும் பணி விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
இலுப்பை குளம் துார்வாரும் பணி விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 07, 2025 01:50 AM

புவனகிரி: புவனகிரியில் இலுப்பை குளம் துார்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமேன, கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புவனகிரி, பெருமாத்துாரில் இலுப்பைக் குளம் உள்ளது. இந்த குளத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. குளத்தை துார்வாராததால் நாளடைவில் குளத்தின் ஆழம் குறைந்தது.
இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, புவனகிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, குளம் துார்வாரும் பணி துவங்கியது.
ஆனால், பணியை விரைந்து முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து மீண்டும் குளம் துார்வாரும் பணி துவங்கியது. ஆனால், குளத்தின் மேற்கு பகுதியில் துார்வாரிய மண்ணை பயன்படுத்தி கரையை பலப்படுத்தாமல், சாலையில் கொட்டி வருகின்றனர். இதனால், வாகன ஓட்டுனர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, துார்வாரும் பணியை விரைந்து முடிக்கவும், துார்வாரிய மண்ணை பயன்படுத்தி கரைகளை பலப்படுத்த வேண்டுமெனவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.