/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொங்கல் பொருட்கள் வாங்க கடலுாரில் குவிந்த மக்கள்
/
பொங்கல் பொருட்கள் வாங்க கடலுாரில் குவிந்த மக்கள்
ADDED : ஜன 14, 2025 07:45 AM

கடலுார்; பொங்கல் பண்டிகைக்கு பொருட்கள் வாங்குவதற்கு கடலுார் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தமிழகத்தில் இன்று தை பொங்கல், நாளை மாட்டுப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
இதையொட்டி, பொங்கல் பண்டிகை பொருட்கள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு கடலுார் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், கடலுார் உழவர் சந்தைக்கு நேற்று டன் கணக்கில் வாழைத்தார்கள், பழங்கள், பன்னீர் கரும்பு குவிந்தது.
வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வாழைத்தார்கள் வாங்குவதற்கு திரண்டனர்.
இதில், 500 ரூபாய்க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது. மஞ்சள் கொத்து 20 ரூபாய்க்கும், பன்னீர் கரும்பு ஜோடி 80 முதல் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.