ADDED : ஏப் 26, 2026 09:15 PM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில், விடுமுறை தினத்தை கொண்டாட, பொதுமக்கள் குவிந்தனர்.
கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வீட்டிலேயே அவ்வப்போது முடங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், நேற்று மாலை கடலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர், கடல் அலைகளில் கால் நினைத்து, விளையாடி, கடற்கரையை ரசித்து மகிழ்ந்தனர்.
