ADDED : ஆக 18, 2025 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் துறைமுகம் மீன்பிடி தளத்தில் அசைவ பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆடி மாத வெள்ளிக் கிழமை விரதம் முடிந்து, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், கடலுார் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க அசைவ பிரியர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.
கடந்த சில நாட்களாக கடலில் மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. இந்த வாரம் மீன்கள் விலை சற்று குறைவாக காணப்பட்டது.
மீன்கள் வரத்து அதிகரித்ததால், மீன்பிடி துறைமுகம், முதுநகர் மீன் மார்க் கெட் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் மீன்கள் விற்னையானது.
துறைமுகத்தில் ஒரு கிலோ மீன் வஞ்சிரம் ரூ.1,000, கணவா 200, இறால் 400, பால் சுறா 800, ஷீலா 300, நெத்திலி 200, கொடுவா மீன் 650, பாறை மீன் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அசைவப் பிரியர்கள் அதிக மீன்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.