/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரசாயனம் கலந்த தர்பூசணி சிதம்பரத்தில் மக்கள் அதிர்ச்சி
/
ரசாயனம் கலந்த தர்பூசணி சிதம்பரத்தில் மக்கள் அதிர்ச்சி
ரசாயனம் கலந்த தர்பூசணி சிதம்பரத்தில் மக்கள் அதிர்ச்சி
ரசாயனம் கலந்த தர்பூசணி சிதம்பரத்தில் மக்கள் அதிர்ச்சி
ADDED : மார் 31, 2025 05:12 AM

சிதம்பரம் : சிதம்பரம் பகுதியில் ரசாயனம் செலுத்தி தர்பூசணி விற்பனை செய்வதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சிதம்பரம் வண்டிகேட் அருகே நேற்று விற்பனை செய்யப்பட்ட தரப்பூசணி பழத்தை, செந்தில் என்பவர் வாங்கி வீட்டிற்கு சென்றார்.
பழத்தை சாப்பிட வெட்டிய போது, வழக்கத்திற்கு மாறாக தர்பூசணி பழம் அதிக சிவப்பு நிறமாக இருந்ததால் சந்தேகமடைந்தார். டிஷ்யு பேப்பர் மூலமாக பழத்தின் உள் பகுதியை துடைத்த போது, சிவப்பு நிறம் ஒட்டிக் கொண்டது. அதிர்ச்சியடைந்த அவர், வியாபாரியிடம் சத்தம் போட்டு விட்டு சென்றார்.
இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.