/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீடுகளில் பாம்புகள் தஞ்சம் கடலுாரில் மக்கள் அச்சம்
/
வீடுகளில் பாம்புகள் தஞ்சம் கடலுாரில் மக்கள் அச்சம்
வீடுகளில் பாம்புகள் தஞ்சம் கடலுாரில் மக்கள் அச்சம்
வீடுகளில் பாம்புகள் தஞ்சம் கடலுாரில் மக்கள் அச்சம்
ADDED : அக் 16, 2024 07:13 AM
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக, வளைகள் மற்றும் புதர்களில் இருந்த பாம்புகள், அருகே உள்ள வீடுகளில் தஞ்சமடைந்து வருகிறது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், தீயணைப்பு துறை மற்றும் பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்
தகவலின்பேரில், கடலுார் கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம், கே.என்.பேட்டை, ரெட்டிச்சாவடி, நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் நேற்று ஒரே நாளில் புகுந்த 13 தண்ணீர் பாம்பு மற்றும் 6 நாக பாம்புகளை பாம்புபிடி வீரர் செல்லா பிடித்துள்ளார். நேற்று முன்தினம் 6 பாம்புகள் சிக்கியது.
மழை காலங்களில் பாம்புகள் வீடுகளுக்குள் புகும் அபாயம் உள்ளதால், வீடுகளின் முகப்பு பகுதியில் தேவையில்லாத பொருட்களை அகற்றி சுத்தமாக வைத்திருக்க தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.