/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் வெயில் தாக்கத்தால் மக்கள்... கடும் அவதி; சராசரியை விட அதிகரிக்கும் என தகவல்
/
மாவட்டத்தில் வெயில் தாக்கத்தால் மக்கள்... கடும் அவதி; சராசரியை விட அதிகரிக்கும் என தகவல்
மாவட்டத்தில் வெயில் தாக்கத்தால் மக்கள்... கடும் அவதி; சராசரியை விட அதிகரிக்கும் என தகவல்
மாவட்டத்தில் வெயில் தாக்கத்தால் மக்கள்... கடும் அவதி; சராசரியை விட அதிகரிக்கும் என தகவல்
ADDED : ஏப் 03, 2024 03:14 AM
தமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்கள் கோடை காலங்கள் ஆகும். இக்காலத்தில் வெயில் 100 டிகிரிக்கும் மேல் வாட்டிவதைக்கும். அதனால் உடல் நலத்திற்கு கேடு என்பதால்தான் பள்ளி, கல்லுாரிகளுக்கு, விடுமுறை அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பருவ மழை சராசரியை விட சற்று குறைவாக பெய்துள்ளது. இந்த மழையும் ஒரே நேரத்தில் வெளுத்து வாங்கியதால் சரி வர பூமிக்குள் தண்ணீர் ஊடுருவி செல்லவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வெப்பம் உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முடிந்து ஏப்ரல் துவக்கத்திலேயே வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. கடலுார் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று 96.4 டிகிரி வீசியது. ஒரு சில நாட்களில் சதம் அடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
சுட்டெரிக்கும் வெயிலால் மாவட்டத்தில் பகல், இரவு நேரங்களில் அனல் காற்று வீசுவதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கடந்த ஆண்டு சராசரி வெப்ப அளவை விட கூடுதலாக இருப்பதாகவும், இனிவரும், 3 வாரங்களும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த ஆண்டு கோடையில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. அரசியல் கட்சியினர் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வெயிலின் கொடுமையால், பிரசாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலுார் வானிலையாளர் பாலமுருகன் கூறுகையில், ' கோடை காலமான ஏப்ரல் முதல் ஜூன் வரை கடும் வெயில் அடிக்க வாய்ப்புள்ளது. தற்போது கோடை மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் 84 சதவீதம் முதல் 94 சதவீதமாக உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் சராசரி வெயிலை காட்டிலும் கோடை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் வெயில் சுட்டெறிக்கும்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10 மாவட்டங்களில் 100 டிகிரியை எட்டும் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த வெப்ப அலை மேலும் சில நாட்கள் தொடர்ந்து நீடிக்கும். அடுத்த 5 நாட்களில் அதிக வெப்பம் காரணமாக அசவுகரியமான நிலை ஏற்படும். அவ்வப்போது அனல் காற்று வீசும், புழுக்கம், வியர்வை அதிகரிக்க கூடும். எனவே, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என, தெரிவித்தார்.

