/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சித்தரசூர் பகுதி மக்கள் நிவாரணம் கேட்டு மனு
/
சித்தரசூர் பகுதி மக்கள் நிவாரணம் கேட்டு மனு
ADDED : டிச 13, 2024 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி,: அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க அண்ணாகிராம ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் சித்தரசூர் மக்கள் பண்ருட்டி தாசில்தார் ஆனந்த்திடம் நேற்று மனு அளித்தனர்.
இதில் கூறியிருப்ப தாவது:
பண்ருட்டி அடுத்த சித்தரசூர் பகுதியில் அகரம், எழுமேடு, பாலுரில் இருந்து சித்தரசூர் வழியாக பாதியில் நிறுத்தப்பட்ட சக்கலி வாய்க்கால் ஆக்கிரமிப்பு காரணமாக வெள்ள நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால் சித்தரசூர் பகுதியில் மழை வெள்ளத்தில் வீடுகள் அதிகளவில் சேதமாகின.
இதில் வாழ்வாதாரம் பாதித்துள்ளன. தமிழக முதல்வர் அறிவித்தபடி இப்பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என கூறியுள்ளனர்.

