/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு சிதம்பரத்தில் மக்கள் போராட்டம்
/
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு சிதம்பரத்தில் மக்கள் போராட்டம்
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு சிதம்பரத்தில் மக்கள் போராட்டம்
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு சிதம்பரத்தில் மக்கள் போராட்டம்
ADDED : ஜன 09, 2025 12:41 AM

சிதம்பரம், ; லால்புரம் ஊராட்சியை, நகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் நகராட்சியோடு பள்ளிப்படை, உசுப்பூர், லால்புரம், சி.தண்டேஸ்வரர் நல்லுார், நான் முனிசிபல், சி.கொத்தங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லால்புரம் ஊராட்சி மக்கள், மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை சிதம்பரம் வடக்கு வீதி தபால் நிலையத்தில், துணைமுதல்வர் உதயநிதிக்கு, கோரிக்கை அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள் நகராட்சியோடு சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.