/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழைநீரில் இறங்கி மக்கள் போராட்டம்
/
மழைநீரில் இறங்கி மக்கள் போராட்டம்
ADDED : டிச 05, 2025 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: தேங்கிய மழைநீரில் நின்றபடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தில் மூலக்காடு மற்றும் தெற்கு தெருவில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிப்புகள் உள்ளன.
கடந்த சில தினங்களாக, பெய்த தொடர் மழையால் வீதிகள் தோறும் மழைநீர் தேங்கி நிற்பதால் பொது மக்கள் மிகுந்த சிரமமடைந்தனர். ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, தேங்கிய மழைநீரில் நின்றபடி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துவிட்டு கலைந்து சென்றனர்.

