ADDED : ஜன 02, 2024 06:00 AM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டில் கால்வாய் பணி அரைகுறையாக முடிக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நடுவீரப்பட்டு டானாசாவடி பஸ் நிறுத்தத்தில் கழிவுநீர் தேங்கி பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இதனால், பஸ் நிறுத்ததிலிருந்து வடக்குதெரு வரை 15வது நிதிக்குழு மான்ய நிதியில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. இப்பணி, முழுமை பெறாமல் அரைகுறையாக உள்ளதால், சாலையில் மீண்டும் தண்ணீர் தேங்கி வருகிறது.
இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, கால்வாய் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
