தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அறிவிக்கப்படாத மின்வெட்டு:  விருதையில் மக்கள் அவதி

அறிவிக்கப்படாத மின்வெட்டு:  விருதையில் மக்கள் அவதி

அறிவிக்கப்படாத மின்வெட்டு:  விருதையில் மக்கள் அவதி


UPDATED : ஜூன் 09, 2026 04:29 PM

ADDED : ஜூன் 09, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 09, 2026 04:29 PM ADDED : ஜூன் 09, 2026 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெருவணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், லட்சக்கணக்கான குடியிருப்புகள் மின்வினியோகம் பெற்று பயனடைந்து வருகின்றன.

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, இப்பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்து வருவதால் பொது மக்கள், வியாபாரிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண் அயர்ந்து துாங்கும் நேரத்தில் மின்வெட்டு ஏற்படுகிறது.

தற்போது, அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் உஷ்ணம் குறையாத நிலையில், பகலில் வீட்டிற்குள் முடங்கிய மக்கள், இரவில் மின்சாரம் இல்லாமல் துாங்க கூட முடியாமல் தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மின்வாரிய அலுவலர்களிடம் தொடர்பு கொண்டால், ஜம்பர் பழுது, துணைமின் நிலையத்தில் பழுது, டிரான்ஸ்பார்மரில் ஆயில் லீக்கேஜ் என காரணங்களை அடுக்குகின்றனர். 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு தொடர்கிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மின்தடை அறிவித்த நிலையில், ஒரு சில இடங்களில் மட்டுமே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மின்சப்ளை சீராக இருந்த பகுதிகளிலும் திடீர் பழுது என பகல் மட்டுமல்லாது இரவிலும் மின்வெட்டு தொடர்கிறது.

தமிழக அரசியலில் ஜாம்பவான்களான தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக த.வெ.க., ஆட்சியமைத்த காரணத்தால், ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற சதியா அல்லது பழுதான மின் உபகரணங்களால் மின்வெட்டு தொடர்கிறாத என்பது கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, விருத்தாசலம் செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு தொடர்வதை தடுத்து நிறுத்தி, சீரான சப்ளை வழங்கிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us