/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய குடிநீர் தொட்டி மக்கள் கோரிக்கை
/
புதிய குடிநீர் தொட்டி மக்கள் கோரிக்கை
ADDED : அக் 08, 2024 02:38 AM

பெண்ணாடம்: வெண்கரும்பூரில் பழுதான மேல்நிலை குடிநீர் தொட்டியை புனரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெண்கரும்பூர் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
போதிய பராமரிப்பின்றி நாளடைவில் குடிநீர் தொட்டியில் விரிசல் ஏற்பட்டு, தண்ணீர் கசிந்து வீணாகிறது.
இதனால் முழு அளவு தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் கிராம மக்கள் அவதியடைகின்றனர்.
எனவே, வெண்கரும்பூரில் பழுதான மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடித்து அகற்றி புதிதாக கட்ட ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.