/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேல்நிலை தொட்டி பழுது புனரமைக்க மக்கள் கோரிக்கை
/
மேல்நிலை தொட்டி பழுது புனரமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : நவ 04, 2024 05:38 AM

திட்டக்குடி : சாத்தநத்தத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திட்டக்குடி அடுத்த ஆதமங்கலம் ஊராட்சி, சாத்தநத்தத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
பஸ் நிறுத்தம் அருகே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
போதிய பராமரிப்பின்றி உள்ள நீர்தேக்கத் தொட்டியில் பில்லர்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத சூழல் உள்ளது.
எனவே, சாத்தநத்தத்தில் பழுதான மேல்நிலை குடிநீர் தொட்டியை புனரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.