/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நந்தப்பாடி - மோசட்டை வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட மக்கள் கோரிக்கை
/
நந்தப்பாடி - மோசட்டை வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட மக்கள் கோரிக்கை
நந்தப்பாடி - மோசட்டை வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட மக்கள் கோரிக்கை
நந்தப்பாடி - மோசட்டை வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட மக்கள் கோரிக்கை
ADDED : மார் 02, 2024 06:10 AM
பெண்ணாடம் : நந்தப்பாடி - மோசட்டை இடையே வெள்ளாற்றின் மீது மேம்பாலம் கட்ட வேண்டும் என முப்பது கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடம் அடுத்த நந்தப்பாடி - மோசட்டை இடையே செல்லும் வெள்ளாற்றை கடந்து, அரியலூர் மாவட்டம் புக்குழி, ஆலத்தியூர், முதுகுளம், ஆதனக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, கோட்டைக்காடு, ஓலையூர், ஆண்டிமடம் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். இதேபோன்று, இங்குள்ள திருமலை அகரம், நந்திமங்கலம், வடகரை, கோனூர், செம்பேரி, சவுந்திரசோழபுரம், அரியராவி, பெ.பூவனூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆற்றைக் கடந்து ஜெயங்கொண்டம், அரியலூர், ஆண்டிமடம், உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
மழைக்காலங்களில் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, போக்குவரத்து துண்டிக்கப்படும். அப்போது, வெள்ளநீர் வடியும் வரை அரியலூர் மாவட்ட கிராம மக்கள் 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பெண்ணாடம் வர ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், கருவேப்பிலங்குறிச்சி வழியாக 30 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டும். அதேபோல், பெண்ணாடம் பகுதி மக்கள் 30 கிலோ மீட்டர் துாரம் சுற்ற வேண்டியுள்ளது. இதனால் நேர விரயம் ஏற்படுவதுடன் கூடுதல் செலவு ஏற்படுகிறது.
எனவே, இரு மாவட்ட கிராம மக்கள் நலன்கருதி, நந்தப்பாடி - மோசட்டை இடையே வெள்ளாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

