/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிராம செயலக கட்டடம் திறக்க மக்கள் எதிர்பார்ப்பு
/
கிராம செயலக கட்டடம் திறக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 11, 2025 11:19 PM

நடுவீரப்பட்டு: சன்னியாசிப்பேட்டையில் கட்டி முடிக்கப்பட்ட கிராம செயலக கட்டடத்தினை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பண்ருட்டி, பாலுார் அடுத்த சன்னியாசிப்பேட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம், வி.ஏ.ஓ.,அலுவலக கட்டடம் பழுதானது.
இதனால் கடந்த ஆண்டு இந்த இரண்டு கட்டடங்களையும் இடித்து விட்டு 42.65 லட்சம் ரூபாய் மதிப்பில் கிராம செயலக கட்டடம் கட்டும் பணி துவங்கியது.
இதனால் வி.ஏ.ஓ., அலுவலகம் கிராம சேவை மைய கட்டடத்திலும், ஊராட்சி மன்ற அலுவலகம் நுாலக கட்டடத்திலும் தற்காலிகமாக இடமாற்றம் செய்து இயங்கி வருகிறது. கிராம செயலக கட்டடத்தின் ஒரு பகுதியில் வி.ஏ.ஓ., அலுவலகமும், மற்றொரு பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகமும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்காததால் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் இடநெருக்கடியில் அவதியடைந்து வருகின்றனர்.
கிராம செயலக கட்டடம் பயன்பாட்டிற்கு வராததால் இரவு நேரத்தில் குடிப்பிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது.
எனவே, கிராம செயலக கட்டடத்தை உடனடியாக திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.